அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கைது!

அவன்ற் கார்ட்  நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று(வியாழக்கிழமை) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்