அரச ஊடகங்கள் பக்கசார்பான முறையில் செயற்படுகின்றன – மஹிந்த அணி!

அரச ஊடகங்கள் பக்கசார்பான முறையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளர் என்ற முறையில் தேர்தல் கலாசாரத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஊடக சந்திப்புக்களில் கூறப்படும் விடயங்கள் அரச ஊடகங்களினால் திரிபுபடுத்தப்படுகின்றது.

அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பான கொள்ளையை பின்பற்றி தேசிய வேட்பாளரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும். நாட்டில் வீழ்ச்சிக் கண்டுள்ள கலாசாரம் மற்றும் தேசிய பாதுகாப்பினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு வேலைத்திட்டமொன்று அவசியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்