யாழ்.சர்வதேச விமான நிலைய திறப்பு விழா – யாழில் மூன்றடுக்கு பாதுகாப்பு

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்.சர்வதேச விமான நிலையம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணைந்து விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளனர்.

அத்தோடு, இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் இந்தியாவிலிருந்து இந்த விமான நிலையத்துக்கு முதலாவது பயணிகள் விமானம் இன்று வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்