ஒரே வேலையை செய்வோருக்கு சமனான சம்ளம் வழங்குதல் வேண்டும் என ஜக்கிய தேசிய கட்சியிடம் அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கம் வலியுறுத்தல்

சமனான வேலைகள் செய்வோருக்கு சமனான சம்பளம் வழங்குதல் வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திஸ்ஸ அத்த நாயக்கவுக்கும்  அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பின் போது  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் அழைப்பை ஏற்று அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தின் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக், செயலாளர் நாயகம், வ.பற்குணன், பொருளாளர் யூ.எல்.எம்.ஜஃபர், ஊடக செயலாளர், யூ.உதயகாந்த், அம்பாரை மாவட்ட செயலாளர், பீ.கோகுலரமணன், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பார் எஸ்.நவநீதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (14) திஸ்ஸ அத்த நாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
இதன்போது முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஒரே வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அதிகமான சம்பளமும்,  அதிகமான வருடாந்த சம்பள உயர்ச்சி தொகையும் வழங்கப்பட  அதேவேலையை செய்கின்ற முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு குறைவான சம்பளமும், குறைவான வருடாந்த சம்பள உயர்ச்சியும் வழங்கப்படுகின்றது.
எனவே ஒரே வேலையை செய்பவர்களுக்கு இவ்வாறு வௌ;வேறான சம்பளத்திட்டத்தில் ஒரு சாராருக்கு கூடுதலாகவும் ஒரு சாராருக்கு குறைவாகவும் சம்பளம் வழங்குவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது இது அரசின் பாராபட்சமான செயற்பாடு எனவும் குறிப்பிட்டு ஒரே வேலையை செய்பவர்களுக்கு ஒரே சம்பளமும் சம்பள உயர்ச்சி முறையும் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட கடமைப் பொறுப்புக்கள் எந்தவொரு அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் வழங்கப்படவில்லை. முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்குரிய கடமைப் பொறுப்புக்களே, அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புக்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டாம் என பலசுற்றுநிருபங்கள் வெளிவந்தும், தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றனர்
இது தொடர்பில் திணைக்கள தலைவர்களும், நிறுவன பொறுப்பு அதிகாரிகளும் தமது அலுவலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களுக்கான வேலைகள் தத்தமதது அலுவலகங்களில் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். வேலைகள் இல்லாத பதவிகள் ஆளணி ஆணைக்குழு உருவாக்கியுள்ளமை பற்றியும் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன், இவ்;வாறு செய்யப்படுவதனால் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தேவையான முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் கணக்கிட்டு வெற்றிடங்களை உருவாக்க முடியாதுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது
இலங்கை நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்கையில் தற்போது, திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் 75 சத வீதமும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 20 சதவீதமும் சேவை மூப்பு அடிப்படையில் 5 வீதமுமாகச் செய்யப்படுகின்றது. இது முறையே 40 சதவீதம், 40 சதவீதம், 20 சதவீதம் என செய்தல் வேண்டும்,
இலங்கை நிருவாக சேவைக்கு நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாமல் உள்ள சேவை மூப்பு அடிப்படையிலான ஆட்சேர்ப்பினை மேலும் தாமதப்படுத்தாமல் செய்யப்பட வேண்டும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எனும் பதவிப் பெயர் முகாமைத்துவ உத்தியோகத்தர் என மாற்றப்படுதல் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று இதன்போது கையளிக்கப்பட்டது.
இவைகளை நன்கு விளங்கி ஏற்றுக்கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையுடன் இப்பிரச்சினைகளை தீர்க்க முறையான கட்;மைப்பொன்றினை உருவாக்குவதாக வாக்குறுதியளித்தர். ஏன அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்