தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்கார் கோட்டா! – விமல் திட்டவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஹொரணையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமது  ஆதரவு  யாருக்கு என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள்  முழுமையான கவனம் செலுத்தி வருகின்றது.  ஐந்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து 13 பிரதான  நிபந்தனைகளை உள்ளடக்கிய கோவையை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த நிபந்தனைகள் தொடர்பில் பிரதான 3 ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் பேச்சுகளை விரைவாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஒருபோதும் கவனம் செலுத்தமாட்டார் என்று விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்