யாழ். பலாலியிலுள்ள சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ். பலாலியிலுள்ள சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வுகள் இன்று காலை பத்து மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.இந்த நிகழ்வின் போது, சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வரவிருப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும், எதிர்வரும் 27ஆம் திகதி முதலே வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில், இன்றைய நிகழ்வை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்