தேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

இந்தோனேசியா, கொரியா மற்றும் தெற்காசிய நாடுகளின் பிரதிநிகள் குழுவே இவ்வாறு வருகைதரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளை அங்கத்துவப்படுத்தி 20 பேர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் வன்முறை தொடர்பாக 85 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பாக 650 முறைப்பாடுகளும், ஆறு வன்முறை சம்பவங்கள் மற்றும் 17 முறைப்பாடுகள் உட்பட மொத்தமாக 673 சம்பவங்கள் கடந்த 8 ஆம் திகதியிலிருந்து இதுவரை பதிவாகியுள்ளன.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு 289 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவுக்கு 361 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்