வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது!

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஓருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

வவுனியாவில் கடந்த 9 ஆம் திகதி சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த  27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ் என்ற
முச்சக்கர வண்டி சாரதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது உடல்  தீயில் எரிந்த நிலையில் கள்ளிக்குளம் பகுதியில்  மீட்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மற்றும் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு
பொலிஸார் பலதரப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கொலையாளி என சந்தேகிக்கும் நபர் ஒருவரை பொலிஸார் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் தானே தனிநபராக கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்திலிருந்த  தங்க சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த  மோதிரம் என்பவற்றுக்காகவே கொலை செய்ததாகவும் ஏற்கனவே கடந்த 07.10.2019 அன்று கொலை செய்ய திட்டம் தீட்டி நெடுங்கேணிக்கு அழைத்து சென்றதாகவும் எனினும் அன்றைய தினம் கொலை செய்ய முடியாமல் போனதால் மீண்டும் கடந்த 9 ஆம் திகதி அன்று தனது திட்டத்தின்படி கொலை செய்ததாகவும் தனது வாக்குமூலத்தில் கொலை சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக பொலிசார் ஊடாக அறிய முடிகிறது

சந்தேக நபரை  வவுனியா நீதிமன்றில்  முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்