சம்மாந்துறை மட்/தரவை பகுதியில் இனம் காணப்பட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்…

பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் (WDF ) கடந்த மாதம் (2019-09-07) அன்று சம்மாந்துறை உதயபுரம் சனசமூக நிலையத்தில் பிரதேச மட்ட குழுவின் ஊடாக சம்மாந்துறை மட்/தரவை பகுதியில் இனம் காணப்பட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அந்த கூட்டத்தில் மட்/தரவை மயானம் ஆக்கிரமிக்க படுவதாகவும் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகவாறு எடுக்க கூடிய நடவடிக்கைகளும் மற்றும் குறித்த பகுதியில் உள்ள மைதானம் விரிவாக்கபட எடுக்க படுகின்ற முயற்சியும் இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிக்கான எதிர்கால நடவடிக்கைகளும் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இனம் காணப்பட்ட பிரச்சினை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறை பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் இன்று (17) இடம்பெற்றது

இந்நிகழ்வில் குறித்த மட்/தரவை பகுதியில் இடம்பெறும் பிரச்சினைகளை இனிவராமல் இன நல்லுறவுடன் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் WDF கண்டி அமைப்பாளர் இந்திகா ,ஆலய தலைவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் பிரதேச செயலாளருக்கு தெளிவுபடுத்தி குறித்த பிரச்சினை பற்றிய அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

இவ்விடயம் பற்றி பிரதேச சபை மற்றும் நிலஅளவையாளர்களுடன் பேசி குறித்த பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வாறு தீர்வை பெற்று தருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனிபா மாற்று உப பிரதேச செயலாளர் WDF அமைப்பு உறுப்பினர்கள் ,ஆலய, தலைவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்