IOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்  பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM)பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட செயலகத்தோடு இணைந்து மகளீர்க்கான காற்பந்தாட்ட அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகளையும்  அத்தோடு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வினையும் இன்று வெகுசிறப்பாக நடாத்திக் கொண்டிருக்கின்றது.

IOM  பற்றி…

மனிதாபிமான மற்றும் ஒழுங்கான புலம்பெயர்வு; புலம்பெயர்ந்தோர்க்கும் அச் சமூகத்துக்கும் பயனளிக்குமெனும் கொள்கையை IOM கொண்டுள்ளது.

புலம்பெயர்ந்தோரின் உரிமையைப் பாதுகாத்தல் அவர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை நிலை நிறுத்தல் மேலும் குடியேற்றத்தின் செயற்பாட்டு சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் பங்குதாரர்களுடன்   IOM செயற்படுகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்