பொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

பங்காளி கட்சிகளுக்கு ஐ.தே.க. கட்டுப்படாது எனவும் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது
நிபந்தனைகளுக்கு ஒருபோதும் கட்டுப்பாடாது எனவும் அக்கட்சியின் தவிசாளர் கபிர் ஹாசிம்
தெரிவித்திருப்பது பொறுப்பற்ற – ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும்.”
இப்படித் தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சஜித் பிரேமதாஸாவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என்பதை உள் மனதில் வைத்திருந்த
கபிர்ஹாசிம் தனது எண்ணத்தை தமது தலைவர் ரணிலிடம் சொல்ல முடியாத – முதுகொலும்பற்ற
நிலையில் மு. காவின் தலைவரின் தயவை நாடி அவர் மூலமாக சொல்ல வைத்ததை நினைவில்
கொள்ளவேண்டும். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியினர் என்ற ரீதியில் அதில் அங்கம்
வகித்து வந்த அனைத்து கட்சிகளும் நிபந்தனைகள் அற்றவகையிலேயே தமது முழுமையான ஆதரவை
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கியிருக்கின்றன. இதற்கான பிரதான
காரணம் முதலில் பொது எதிரி தோற்றக்கடிக்கப்படவேண்டும் என்பதாகும்.

இந்த ஆதரவை வழங்குவதன் ஊடாக வெற்றிபெறும் தமது வேட்பாளர் மூலமாக தமது சமூகங்களுக்குரிய அபிலாஷைகளை பெற்றேடுக்க வேண்டும் என்பதே சிறுபா ன்மைக் கட்சிகளின்
எதிர்பார்ப்பாகும். இதற்காகவே அவர்கள் தற்போது களத்தில் குதித்து செயற்பட்டு
வருகின்றனர். எனவே பொறுப்பற்ற அர்த்த மற்ற கருத்துகளை முன்வைப்பதை முக்கிய
பொறுப்பில் இருக்கும் கபிர் ஹாசிம் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும் இவரது இத்தகைய
கருத்துகள் காரணமாக ஒவ்வொரு கட்சி களினது போராளிகளும் மனம் புண்பாட்டு போயுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனைவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உடன்பாடு செய்து கொண்டு தற்போது
ஆதரவுவழங்க முன்வந்திருக்கிறது. இதற்கான பிரதான காரணம் ஒருதரப்புமீது மறுதரப்புக்கு
விசுவாசமற்ற நிலை இருப்பதாகும்.

ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியை பொறுத்தவரையில் அவ்வாறான விசுவாச மற்ற
நிலையிருக்கவில்லை. இந்த முன்னணியிலுள்ள அனைத்து தரப்பினரும் தமது வேட்பாளர் வெற்றி

பெறவேண்டும் இதன் மூலமாக இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டும் என்ற உயரிய
நோக்கினை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின் றனர். வெற்றி இலக்கை தொட்ட பின்னரே பல்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத் தும் பங்காளி கட்சியினர் தமக்குரிய உரிமைகளை தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே அவர்களது நம்பிக்கை. அப்போது அதற்காக நிபந்தனைகளையும் கால அவகாசங்களையும் அவர்கள் முன்வைப்பதும்  தவறாகிவிடாது.

எனவே இப்போது வழங்கப்படும் ஆதரவானது பொது எதிரிக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும்
என்பதற்கானது என்பதைக் கருத்தில் கொள்வது நல்லது. பொறுப்பு மிகு பதவியில்இருக்கும் கபிர்
ஹாசிம் போன்றோர் இவ்வாறு பொறுபற்ற முறையில் கருத்துப் பகிர்வதைத் தவிர்த்தால்
நல்லது- என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்