வடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி! – ஆலயப் பிரதம குருக்கு காயம்

இயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது. அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.

இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்  பிரதம குருக்கள் நாகேந்திர சர்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும், ஆலய அன்னதான மடத்தில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் இருக்கும் மாமுனை அ.த.க. பாடசாலையில் கல்வி பயின்ற மணவர்கள் மினி சூறாவளியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்