762 தேர்தல் வன்முறைகள் எட்டு நாட்களுக்குள் பதிவு

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தற்போது நாடளாவிய ரீதியில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தேர்தல் பிரசார செயற்பாடுகளின் போது இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் குறித்து அவதானம் செலுத்தி வரும் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரையில் 762 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அது மேலும் கூறுகையில்,

“கடந்த 8ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான எட்டு நாட்களுக்குள் 762 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் சட்டத்திட்டங்களை மீறியதாக 733 முறைப்பாடுகளும், வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த 16ஆம் திகதி மட்டும் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 89 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் 83 முறைப்பாடுகள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியுள்ளன. 6 முறைப்பாடுகள் தேர்தல் காலங்களில் இடம்பெறும் வெவ்வேறு முரண்பாடுகளாகும்” – என்று குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்