சஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு! இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா?

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மிகவும் எளிமையான தலைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச உடலில் பனியன் கூட அணியாத அளவுக்கு மிகவும் எளிமையான நபர் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதாவது ஒரு குண்டை தூக்கி வீசுவார்.

அதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பு வீசுமாறு கோருவதாகவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல், ஜனாதிபதி வேட்பாளர், தேர்தல் என்பதற்கும் அப்பால் சஜித் பிரேமதாச மிகவும் சாதாரணமாகவும் எளிமையாகவும் வாழக்கூடிய ஒரு மனிதர். தனது நடை உடைகளில் கூட ஆடம்பரத்தை அவர் காட்டியதில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்