மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 20 அம்ச கோரிக்கை கோட்டாவிடம் கையளிப்பு!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 20 அம்ச கோரிக்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) இந்த கோரிக்கை கையளிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய நிர்வாக கட்டமைப்புக்கு எதிராக செயற்படும் சக்திகள் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கையே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 20 அம்ச கோரிக்கை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடமும் கையளிக்கப்பட்டிருந்தது.

சஜித் பிரேமதாச சார்பில் அமைச்சர் மத்தும பண்டார அண்மையில் இந்த கோரிக்கை கடிதத்தினை பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்