இனவாத மற்றும் தீவிரவாத கோரிக்கைகளுக்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் உடன்படாது – இந்திக அனுருத்த

இனவாத மற்றும் தீவிரவாத கோரிக்கைகளுக்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் உடன்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்துள்ள யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமது நிலைபாட்டை வெளியிட வேண்டும்.

எந்தவொரு கட்சியுடனும் கலந்துரையாடல்களுக்கு நாம் தயார். எனினும் வடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டமாக தனித்தனியாக சட்டமியற்ற மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ தயாரில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்