ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமருக்கு அறிவிப்பு!

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தினுள் நெல் களஞ்சியப்படுத்தியதன் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடி குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக அமைச்சர் தயா கமகே இன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்