கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் நாளை பிற்பகல் 3.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.

மேலும் கோட்டை, புறக்கோட்டை, கொழும்பு – 9 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்துடன் இடம்பெறும் என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்