கோட்டாவுனான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திடுகின்றது சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இன்று(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன்போது இன்று கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அண்மையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திப்பட்டிருந்தது.

அதேபோன்று நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்