கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மிஹியான பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தமது சங்கத்தின் ஆதரவு அவர் அறிவித்துள்ளார்.

தனியார் துறையாகிய தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாக கெமுனு விஜேரத்ன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இவ்வாறு ஆதரவு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்