ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க!

ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகை வளாகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘செல்வந்த சமூகத்தை பிரதநிதித்துவப்படுத்தும் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடித்து அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வீரனான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 51 வீதமான வாக்குகளை பெற்று நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மற்றும் அவரின் தந்தையின் நிலையான வைப்பில் உள்ள வாக்குகள் நிச்சயமாக அவருக்கு கிடைக்கும்.

அதேபோல் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என்பதோடு நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் 70 வீதமான வாக்குகளும் அவருக்கே. அவ்வாறு வாக்குகள் கிடைத்தால் சஜித் பிரேமதாச 51 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி.

நாட்டில் செல்வந்த வர்க்கத்தினர் 30 வீதமானோரே உள்ளனர். ஆனப்படியால் கோட்டவை தோற்கடிப்பது என்பது சஜித்துக்கு கஜூ சாப்பிடுவது போலாகும்.

வெள்ளை வான், திருட்டு, கொலை போன்ற சம்பவங்களுடன் சஜித்துக்கு, கோட்டாவுடன் மோத முடியாது என்பது உண்மை தான்´ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்