இசுரு தேவப்பிரியவின் பதவிகள் தற்காலிகமாக பறிப்பு!

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையில் மஹரமகவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இசுரு தேவப்பிரிய கலந்து கொண்டதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்