24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 18 மீனவர்களும் மாத்தறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 6 மீனவர்களும் கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நல்லெண்ண அடிப்படையில் குறித்த மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்