வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய!

வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் தேயிலை உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலைமை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

ஒரு நாள் சம்பளம் 1000 ரூபாயாக வேண்டும் என்பது மலையக மக்களின் நியாயமான கோரிக்கையாகும். சம்பள விவகாரத்தில் அரசாங்கம் முழுமையாக தோட்ட கம்பனிகளையே நம்பியிருந்தது.

தோட்ட கம்பனிகள் எப்படியும் மலையக மக்கள் கோரும் சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள்.

மலையக மக்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகளை மாத்திரம் நம்பியிருந்தால் எவ்வித பயனும் ஏற்படாது. நிச்சயம் நாங்கள் 1000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கி மலையகத்தினை நகரத்திற்கு இணையான வசதிகளுடன் அபிவிருத்தி செய்வோம். கல்வி, மற்றும்தொழிற் துறையினை விருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

பொருளாதார ரீதியில் நாங்கள் முன்வைக்கும் திட்டங்கள் மற்றும் வரி நீக்கம் தொடர்பாக ஆளும் தரப்பு தற்போது பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஆட்சிக்கு வந்து வழங்கியுள்ள வாக்குறுதிகளை செயற்படுத்தி பதில் வழங்குவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்