ஊடகவியலாளர் நிமலராஜனின் 19வது நினைவு நிகழ்வு…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் நினைவான இன்றைய தினம் ஈழத்தமிழ் ஊடகவியாளர்கள் படுகொலை நினைவு நாளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகாமையில் இன்று (19) மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மாநகரசபை உறுப்பினரும், ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் உட்பட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வருகை தந்தோரால் நிமலராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்