13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு

13 கோரிக்கைகளை விவாதிக்க ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சந்திக்க மறுத்துவிட்டாலும், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க நாங்கள் இன்னும் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததாகவும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்கள் சந்திக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சுமந்திரன் கூறினார்.

ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால் அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்