1960 ஆம் ஆண்டில் பலாலி எப்படி இருந்தது தெரியுமா? இதோ ஆதாரம்!

1960 ஆம் ஆண்டுகளில் முதன்முதலாக யாழ் பலாலி விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களூடாக கிடைக்கப்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது கடந்த 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் விமானப்படைத் தேவைக்காக குறித்த விமானதளம் அமைக்கப்பட்டது.

அத்தோடு அன்றய தினமே பலாலி விமான நிலையம் என பொறிக்கப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்றே பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இருப்பினும் இதனை பலாலி விமான நிலையம் என மக்கள் பரவலாக அழைத்திருந்தபோதும் தற்போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டு மீண்டும் சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் சென்னைக்கான விமான சேவை கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்