தேர்தல் வன்முறைகள் – மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு ஸ்தாபிப்பு!

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மையத்திற்கு முறைப்பாடுகளை வழங்க 01128 62 212, 01128 62 214 மற்றும் 01128 62 217 தொலைபேசி இலக்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் குறித்த முறைப்பாடுகளை 0112868526 அல்லது 0112868529 என்ற பெக்ஸ் மூலமாகவும், 0719 160 000 என்ற வைபர் அல்லது வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்