சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2019 ஆண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு 4,900 பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்