ஏ9 வீதியில் விபத்து! ஒருவர் பலி

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று 4.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் பலி . வானில் பயணித்த ஐவர் காயமடைந்த அதேவேளை அதில் மூவர் மோசமான !காயங்களிற்குள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ம் கட்டை பகுதியின் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை விபத்தில் சிக்கிய வான் மூன்றுமுறை தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் வீதியின் ஓரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்பட்டுள்ள வடிகான் ஆபத்தானதாக அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியை சேர்ந்த கதிர்பிள்ளை இரத்தினம் என்பவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்தவர்களில் 30 வயது குடும்ப பெண்ணுடன் அவது ஒன்றரை வயது குழந்தையும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்