மன்னாரில் சொகுசுவாகனம் மீது துப்பாக்கிசூடு! தேடுதலில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மன்னாரில் இன்று அதிகாலை உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்தில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள், சொகுசு வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போதிலும் உத்தரவை மீறி வாகனம் வேகமாக பயணித்துள்ளது.

இதனால் அந்த வாகனத்தின் டயர்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

உத்தரவை மீறிச் சென்ற சொகுசு ஜீப் வண்டியில் கேரளா கஞ்சா 164.3 கிலோ கிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் மெதகம பொலிஸ் நிலையத்தில் சேவை செய்யும் பொலிஸ் அதிகாரி எனவும் சாரதி களுவங்கேணியைச் சேர்ந்தவரெனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி குறித்த சந்தர்ப்பத்தில் சீருடையில் இருந்ததாகவும், அவர் வாகனத்தின் முன் பகுதியில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்