யாழில் வயோதிபப் பெண் வெட்டிக்கொலை – பொலிஸார் விசாரணை

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதுடைய குறித்த மூதாட்டி இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டு வளவிலிருந்து ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் வீட்டில் இருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் நுழைவாயிலில் இருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்