களுத்துறையில் தம்பதியினர் வெட்டிக்கொலை – இருவர் கைது

களுத்துறை – அகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அகலவத்தை- கிரிவானகெட்டியவில் உள்ள வீடொன்றிலேயே கணவன், மனைவியான உயிரிழந்தவர்களின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்