ஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பன எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டங்களின் பின்னர், எந்த வேட்பாளரை ஆதரிப்பது அல்லது ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் அமைப்பில் இணைந்திருக்கின்றன. எனவே, ஐந்து கட்சிகளும் இணைந்தே முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்