சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம் 20.10.2019 அன்று மதியம் கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொத்மலை பிரதேச பிரதான அமைப்பளார் அசோக ஹேரத் தலைமையில் இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க மற்றும் முக்கியஸ்தரகள் கலந்து கொண்டனர்.

பெருமளவான ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்