ஜனாதிபதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு பயணமாகியுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று (திங்கட்கிழமை) காலை ஜப்பான் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் 20 பேர் கொண்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு பயணித்ததாக, விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி கூறினார்.

நாளை நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், சௌதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்