காலி கலந்துரையாடல்- 2019’ ஆரம்பம் – சித்திரவதை முகாம்கள் குறித்து ஆராயப்படுமா?

கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் ‘காலி கலந்துரையாடல்- 2019’ எனும் கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு கோல்பேஸ் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் இந்த மாநாடு, நாளை வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் 55 நாடுகள், 10 அனைத்துலக அமைப்புகள், 3 பாதுகாப்பு தொழில்துறைகள் பங்கேற்கும் என கடற்படை தெரிவித்துள்ளது. இது இலங்கை கடற்படை நடத்தும் 10 ஆவது மாநாடாகும்.

இதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்துலக கடற்படை பிரதிநிதிகள், இலங்கை கடற்படையின் சித்திரவதை முகாம்கள் தொடர்பாக நடக்கின்ற விசாரணைகளுக்கு, கடற்படை ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என அனைத்துலக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்