தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமுர்த்தி அதிகார சபைக்கு விஜயம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமுர்த்தி அதிகார சபைக்கு செல்லவுள்ளனர்.

சமுர்த்தி அதிகார சபையில் உறுதிப் பத்திரங்கள் தயார்படுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அங்கு செல்லவுள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்று முன்தினம் சமுர்த்தி அதிகார சபைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சென்றபோது, சுமார் 8 இலட்சம் சமுர்த்தி உறுதிப்பத்திரங்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அந்த இடத்தில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தயா கமகே மற்றும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அந்த சமுர்த்தி உறுதிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்