சந்திரிகாவுடன் இணைந்து சுதந்திரக்கட்சியை கைப்பற்றுவேன்- குமார வெல்கம

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாப்பதற்கு புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமார வெல்கம மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கு எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கவும் பின்னிற்கப்போவதில்லை.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் அது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளேன்.

அதனைத் தொடர்ந்தே  பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர், தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ராஜபக்ஷ குடும்பத்தினர் உரிமையாக்கிக்கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

எனவேதான் கட்சியை பாதுகாப்பதற்காக சந்திரிகாவுடன் இணைந்து செயற்படபோகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்