முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் அமைந்திருக்கின்ற குழந்தை யேசு ஆலயத்தின் சுற்றுமதில் அமைப்பதற்காக நேற்று அத்திவார கிடங்கு வெட்டப்பட்டது.

இதன் போது விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் ஆவணங்கள் சில தென்படுவதனை அவதானித்த மக்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்த புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் ஆவணங்களை மீட்டுச் சென்றனர் எனவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்