கலைவாணி சிறுவர் பூங்கா திறப்பு விழா. சிறப்பு விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான துரித ஊரெழுச்சி அபிவிருத்தி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் 5 இலட்சம் (0.5 மில்லியன்) நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகர முதல்வரின் சிபாரிசில் நாவாந்துறை கலைவாணி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக சிறுவர் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (20) கலைவாணி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பு.அருணாத் தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் மற்றும் டான் ரிவி உரிமையாளர் திரு எஸ்எஸ். குகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந் நிகழ்வில் கலைவாணி சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், அப் பகுதி பொது மக்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் சிறுவர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்