இலண்டன் தமிழினி பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா. பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு…

இலண்டன் தமிழினி பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா. பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

இலண்டன் தமிழினி பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு நிகழ்வு தமிழினி பத்திரிகை நிறுவனத்தின் இணையாசிரியர் திரு பிரியராம் சிவம் அவர்களின் தலமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (20) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவேல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சுவாமி சிதாகாசானந்தா (சின்மயா மிசன் யாழ்ப்பாணம்) மற்றும் திரு முருகேசு கௌரிகாந்தன் (ஓய்வு நிலை சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் இலண்டன் தமிழினி பத்திரிகை நிறுவனத்தின் உறுப்பினர்கள், பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள், மாணவர்கள், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்