கௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாப்பது பற்றிய ஆய்வு நடவடிக்கைகள்…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தின் வளம்நிறைந்த அழகிய கிராமமாகவும் அதிக மண் வளம் நிறைந்த  பூர்வீக கிராமமாக 3000 வருடங்களாக மக்கள் வாழ்ந்து வரும் இடமாகவும் கௌதாரிமுனை  திகழ்கின்றது.
பூர்வீக ஆலயமாக இருக்கும் மண்ணித்தலை சிவன் ஆலயம்  இக் கிராமத்துக்கு பெருமை சேர்ப்பதோடு தொன்மை வாய்ந்த கிராமமாக திகழ்கின்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த நிலையிலும் தற்பொழுது இக்கிராமத்தில் 135 குடும்பங்களே வசித்து  வருகின்றார்கள்
இக் கிராமத்தில் காணப்படும் இயற்கை வளங்களை சுரன்டும்  பல்வேறு முயற்சிகள் பல்வேறுபட்ட தரப்பினராலும் மேற்கொள்ளப்படுவதோடு மக்களுக்கு அற்ப ஆசைகளை காட்டி அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி கவனத்தை  திசை திருப்பி அவ்விடங்களை அபகரிக்க பலர் முயற்சிக்கின்றனர்
இலங்கையிலேயே சில இடங்களிலேயே காணப்படும் மண் வளம் இப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படுவதாலும் அழகான கடற்கரை  சூழல் காணப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பப்படுகின்ற இடமாக இது காணப்படுகின்றது.
குறித்த பிரதேச மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகக் குழுவினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நேற்று குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பிரதேச மக்களுடன் கலந்துரையாடி  கௌதாரிமுனையின் இயற்கை  வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
அத்துடன் குறித்த பகுதிகளில் முதலிடம் விரும்பும் முதலீட்டாளர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாகவும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இயற்கை வளங்களை பாதுகாப்பான முறையில் கையாளும் வகையில் ஏதாவது முதலீடுகளை மேற்கொள்ள முடியுமா என சிறப்பு குழு ஒன்று அமைத்து அவர்களுடைய ஆய்வறிக்கை பெற்று மேலதிக நடவடிக்கை மேற்கொள்வது எனவும் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இக்களவிஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அச்சம் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை கரைச்சி பிரதேச சபை தவிசாளர்  வேழமாலிகிதன்  பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தமிழரசு கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் கிராம பொது அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்