தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை தமது தரப்பினர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படுகின்ற நிபந்தனைகள், நாட்டை பிளவுப்படுத்தும் நிபந்தனைகள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க வாய்ப்பு கிடையாது என கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தேர்தலை புறக்கணிப்பதாக சில தரப்பினர் கூறி வருகின்ற போதிலும், தேர்தல் புறக்கணிக்கப்பட்டால் அது கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சார்பாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்