இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு UAE எச்சரிக்கை

ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை மீதான புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய பயணங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமே ஐக்கிய அரபு இராச்சியம் தனது நாட்டு மக்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையும் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையும் கருத்திற்கொண்டே இந்த பயண எச்சரிக்கையை அந்த நாடு விடுத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பல பயண ஆலோசனைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்