கோட்டாவை கைது செய்யக் கோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஐபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காட்டிலுள்ள காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலையில் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஐநா அமைதிப் படை வர வேண்டும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று, கோட்டாவை கைது செய், எங்கள் உறவுகள் எங்கே, சர்வதேசமே உடனடியாக கோட்டாவை கைது செய், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்தி பக்கச் சார்பற்ற விசாரணையை நடாத்து, கோட்டா ஒரு உயிர் கொல்லி , எமது பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் வழங்க உனக்கு அருகதையில்லை ஆகிய கோசங்களை எழுப்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்