கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான செயற்பாட்டுடன் பெற்றுத் தருவேன்! நாமல் ராஜபக்க்ஷ

தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முழுமையான நிர்வாகச் செயற்பாட்டை நாம் ஆட்சிக்கு வந்ததும் பெற்றுத்தருவோம் என நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

இன்று (22) கல்முனை நகருக்கு வருகைதந்தார். நகரின் பல இடங்களுக்கும் சென்று தமிழ் – முஸ்லிம் மக்களை சந்தித்து அவர் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். தமிழ் பிரதேசங்களுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கோவில்களுக்கும் சென்று சமய வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ காலத்தில் அதிகமாக தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தோம். ஆனால் இன்று தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்ததும் அதனைத் தொடர்வோம்.

ஏழு மாகாணங்களிலும் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். இந்நிலையில் வடக்கும் கிழக்கும் பிரிந்து நின்று எதனையும் சாதிக்கப் போவதில்லை. கல்முனையில் தமிழ் மக்கள் கோரி நிற்கும் பிரதேச செயலகத்தை பெற்றுத் தருவோம்.

உங்கள் பிரதேசங்கள் மீண்டும் அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் எதிர்வரும் தேர்தலில் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி ஆதரவு தெரிவியுங்கள் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்