நீராவிப்பிள்ளையார் ஆலய விவகாரம்: மேல்நீதி மன்றத்தில் விசாரணை!

நீராவியடிப் பிள்ளயார் ஆலய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  விசாரிக்கத் தகுந்தது என கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுள்ளது.

ஞானசார தேரர் உட்பட மூன்று எதிர்மனுதரார்களுக்கும் நீதிமன்றில் தோன்றுமாறு அறிவித்தல் அனுப்ப கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு எதிர்வரும் 08 ஆம் திகதி நவம்பர் மாதம் 2019 ஆண்டு மீண்டும் எடுக்கப்படும்.

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக புதிதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பிக்குவின் உடலை அடக்கம் செய்த விடயத்தில் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவை வழக்குத் தொடுநராகக் கொண்டு தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கேசவன் சயந்தன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளனர்.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனைக்கு உள்ளான ஞானசாரதேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்