பெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி

ஜனாதிபதியாக தான் பதவியேற்றதன் பின்னர், நுண்கடன்களைப் பெற்று அவதியுறுகின்ற பெண்களின் கடன்களை இரத்து செய்யவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு – சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக வட்டி அறவிடும் நிறுவனங்களின் ஊடாக கடனை பெற்று அனர்த்தத்தில் சிக்குண்டுள்ள இலட்சக்கணக்கான பெண்கள் நாட்டில் உள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், அவ்வாறு அதிக வட்டியை அறவிடும் நிறுவனங்களில் கடன்பெற்றுள்ள பெண்களின் கடனை இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்