கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் கட்சி வெற்றி

கனேடிய பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பதவியில் நீடிக்கவுள்ளார்.

நேற்று நடந்த கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ளது. கனேடிய நாடாளுமன்றதின் 338 ஆசனங்களுக்கான தேர்தலில் ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சி 157 ஆசனங்களை வெல்லும் என தேர்தல் பெறுபேறுகள் மூலம் எதிர்வு கூறப்படுகிறது.

ஆட்சியமைப்பதற்கு 170 ஆசனங்கள் தேவை. கடந்த தடவை லிபரல் கட்சி 177 ஆசனங்களைக் கொண்டிருந்தது. இம்முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு அக்கட்சிக்கு 13 ஆசனங்கள் குறைவாக உள்ளன. இதனால் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அக்கட்சி சிரமப்பட நேரிடலாம் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்